Saturday 1 October 2016

மறவாத ஞாபகசக்தி

நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்க மாட்டேன். – (சங்கீதம் 119:93).

அமெரிக்க நாட்டை சேர்ந்த லாரன்ஸ் பீக் என்பவர் பிறந்தபொழுது சீராக வளர்ச்சி அடையவில்லை. மருத்துவரிடம் அழைத்து சென்ற போது மூளையில் குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அந்த குறைபாடுகளினிமித்தம் நான்கு வயது வரை நடக்கவில்லை. அதன் பின்னர் நன்கு வளர்ந்த பின்னரும் சட்டையில் பட்டன் போடுவதற்கு கூட தடுமாறுவான்.
20 மாத குழந்தையாக இருந்தபோது புத்தகங்களை வாசிக்கவும் மனப்பாடம் செய்யவும் ஆரம்பித்தான். ஒரு மணி நேரத்தில் ஒரு புத்தகத்தை வேகமாக வாசித்து விட்டு, அதை மனப்பாடமாக சொல்ல முடியும். வலது கண்ணை வைத்தது புத்தகத்தின் வலது பக்கத்ததையும், இடது கண்ணை வைத்து இடது பக்கத்தையும் ஒரே நேரத்தில் வாசித்து விடுவான். சுமார் 12,000 புத்தகங்களை வாசித்து, அவையனைத்தையும் பாராமல் சொல்ல முடிந்தது. எந்த வருடம் எந்த தேதியை சொன்னாலும் அதன் கிழமையை சரியாக சொல்ல முடியும். அப்படிப்பட்ட ஞாபக சக்தியை புகைப்பட ஞாபகசக்தி என்று அழைக்கின்றனர்.
ஏழுவயதில் அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஏழே நிமிடங்களில் அவனுடைய குறும்பு தாங்க முடியாமல் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்டான். அதன்பின்னர் வாரத்திற்கு இரண்டு நாள் நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்கள் ஒரு ஆசிரியர் அவனது வீட்டிற்கு வந்து அவனுக்கு பாடம் சொல்லி கொடுத்தார்.
14 வயதிலேயே 12ம் வகுப்பு பாடத்திட்டங்களை வெற்றியாக முடித்து விட்டான். 18 வயதில் 160 பேர் பணி புரியும் ஸ்தாபனத்தில் அவர்கள் அனைவருடைய சம்பளக் கணக்கையும் கவனித்து வந்தான். ஒரு வாரத்தில் சில மணி ரேநங்களிலேயே கால்குலேட்டர் உதவியில்லாமல் கூட்டல் கழித்தல் என்று எல்லா வேலையையும் முடித்து விடுவான். கம்பியூட்டர் வந்த பிறகு தன் வேலையை இழந்தார்;.
இவருடைய இந்த ஞாபக சக்தியினிமித்தம் அமெரிக்க பண்டிதர் என்று அழைக்கப்பட்டார். இப்படி அபூர்வமாக ஞாபக சக்தி கொண்ட சிலர் இந்தியாவிலும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு நமது இந்தியாவை சேர்ந்த சகுந்தலா தேவியை சொல்லலாம்.
நமக்கு இப்படி ஒரு அபூர்வ ஞாபக சக்தி இருந்தால் நாம் எதை ஞாபகத்தில் வைத்து கொள்ள முற்படுவோம்? நமது பழைய காலத் நினைவுகளையா? டெலிபோன் நம்பர்களையா? தாவீது ஒரு யோசனையை தருகிறார். ‘நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்’ என்று.
வசனத்தை மனப்பாடம் செய்வது எத்தனை முக்கியம்? சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை மனப்பாட வசனம் சொல்ல வைத்து பழக்குவது நம் வழக்கமாகும். ஆனால் நமக்கு எத்தனை வசனம் மனப்பாடமாக தெரியும்? ஒருவேளை சங்கீதம் 23 மனப்பாடமாக சொல்லுவோம். ஆனால் சங்கீதக்காரன் சொல்கிறார், உமக்கு விரோமாய் பாவஞ் செய்யாதபடிக்கு எமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்’ என்று ஒரு பெரிய காரியத்தை இந்த இடத்தில் சொல்கிறார்.
நாம் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் கர்த்தருடைய வார்த்தையை நம் இருதயத்தில் வைத்து வைத்தால், சோதனை வரும்போது அது நம்மை தற்காக்கும். பாவம் செய்யாதபடி நம்மை காத்து கொள்ளும். ஏத்தனையோ பரிசுத்தவான்கள் தங்களை அப்படி காத்து கொண்டார்கள்.
இன்றைய நாளில் நமக்கு இருக்கும் அலுவல்களில் கர்த்தருடைய வார்த்தையை மனப்பாடம் செய்து இருதயத்தில் வைத்து கொள்வது என்பது நம்மால் முடியாத காரியமாக காணப்படுகிறது. சிறு பிள்ளைகளுக்குத்தான் அது என்று நம்மையே திருப்தி படுத்தி கொள்கிறோம்.
வசனம் படிப்பதற்கு வயது வரம்பு தேவையில்லை. ஆனால் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வசனம் மனப்பாடம் செய்தாலே போதும், ஒரு வாரத்தில் ஏழு வசனங்கள் மனப்பாடம் செய்யலாம். வேத வசனம் படித்து வைத்திருப்பது எப்போதும் நல்லது. தேவையானபோது, ஒரு பிரசங்கமே அதை வைத்து பண்ண முடியும்.
வாஞ்சையோடு வசனத்தை படிப்போம். அந்த அமெரிக்க பண்டிதரை போல நாமும் வேதத்தில் பண்டிதர்களாக மாறுவோம். ஆமென் அல்லேலூயா!
உம்மை வருத்தும் வழியில் நடந்தால் 
என்னை திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்று தந்து நடத்த வேண்டும்
மகிமை மாட்சிமை மா வேந்தன் உமக்கே
துதியும் கனமும் தூயோனே உமக்கே
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உமது அருமையான வாக்குதத்தம் நிறைந்த வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த அற்புத வார்த்தைகளை எங்கள் இருதயத்தில் வைத்து வைத்து, பாவத்திற்கு விலகி ஜீவிக்க கிருபை செய்யும். எங்களால் முடிந்த அளவு மனப்பாடம் செய்ய எங்களுக்கு உதவி செய்யும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:

Post a Comment