தேவ சித்தம் செய்யாதவர்களின் நிலை என்ன?

தேவ சித்தம் செய்யாதவர்களின் நிலை என்ன?


1.தேவ சித்தம் என்பது என்ன?
2.தேவ சித்தம் செய்யாதவர்களின் நிலை என்ன?
1.தேவ சித்தம் என்பது என்ன?
தேவனால் நியமிக்கப்பட்ட எல்லா காரியங்களும் தேவ சித்தம் ஆகும்
உதாரணமாகநாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும் இங்கு நம்முடைய வாழ்க்கையில்வருகிற தேவ சித்தம் என்னவென்றால் பரிசுத்தம் ஆகும் [ 1தெச 4:3 ]
11.தேவ சித்தம் செய்யாதவர்களின் நிலைகள் என்ன?
1.சிங்காசனத்தை இழந்து போகுதல்
2.தேவ மகிமையை இழந்து போகுதல்
3.தேவ அழைப்பை இழந்து போகுதல்
4.ஆத்துமாவை இழந்து போகுதல்
5.இயேசு கிறிஸ்துவை இழந்து போகுதல்
6.ஆவிக்குரிய ஐக்கியத்தை இழந்து போகுதல்
முன்னுரை:
இன்று அனேகருடைய வாழ்க்கை தாறுமாறாக செல்வதற்குக் காரணம் தங்கள் மனம்போன போக்கில் அதாவது தாங்களாகவே ஒரு திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டுஅதின்படி வாழ்வதினால்தான் இவர்களுக்கு அடிக்கடி தோல்விகள் மாறி மாறிவருகிறதை நம்மால் பார்க்க முடிகிறதுஇவர்கள் எப்பொழுதுமே தேவ சித்தத்திற்குஅதாவது தேவ திட்டத்திற்கு எதிரானவர்களாகவே வாழுகிறவர்கள்.
வேதம் தெளிவாக சொல்லுகிறதுஉங்களுடைய நினைவுகள் தேவனுடைய நினைவுகள்அல்ல அதுமட்டுமல்லாமல் நம்முடைய அதாவது மனுஷனுடைய நினைவுகளுக்கும்தேவனுடைய நினைவுகளுக்கும் இருக்கிற இடைவெளி மிகப் பெரியதாகும் என்பதைமறந்து விடாதீர்கள் சிலர் தங்கள் திட்டம் இந்த உலகத்தில் வெற்றி பெறுவதை குறித்துமிகவும் சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள் ஆனால் இவர்கள் தேவனுக்குரிய காரியங்களைதேவன் நமக்காக பரலோகத்தில் ஆயத்தமாகி வைத்திருக்கிற பொக்கிஷங்களை இழந்துபோகிறார்கள் என்பதை அறியாதிருக்கிறார்கள் இப்படியாக தங்களுடைய இஷ்டப்படிவாழ்ந்து தேவ சித்தத்தை மீறி நடந்த கதாபத்திரங்களையும் அவர்கள் இழந்து போனபொக்கிஷங்களையும் வேத விளக்கத்துடன் பின்வருமாறு பார்க்கலாம்.
1.சிங்காசனத்தை இழந்து போகுதல்சவுல்
இஸ்ரவேலின் ஜனங்களின் வேண்டுகோளின்படி தேவன் இஸ்ரவேலுக்கு ஒரு ராஜாவைஏற்படுத்தும் பொறுப்பை அவர் சாமுவேலிடம் ஒப்படைத்தார்சாமுவேல் தீர்க்கதரிசியும்கர்த்தரின் திட்டத்தின்படி எல்லாரிலும் சிறிய கோத்திரம் என்று சொல்லி தன்னைதாழ்மைப்படுத்தி அறிமுகம் செய்து கொண்ட சவுலை ராஜாவாக மாற்றினார்முதலாவதுதேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து வந்துக் கொண்டிருந்த சவுல் ராஜா பிற்பாடுதன்னுடைய சிங்காசனம் உறுதிப்பட்டவுடன் உலக ஜனங்கள் செய்கிற காரியத்தைதானும் செய்யும்படி அதாவது உலக வாழ்க்கைக்கு தன்னை முழுவதுமாகஅர்ப்பணித்தான்இதினால் என்ன நடந்தது நிர்விசாரம் சவுலின் வாழ்க்கையில்நுழைந்தது,
எப்படியென்றால், 1.பெலிஸ்தருக்கு விரோதமாக யுத்தம் வந்தது யுத்தத்திற்கு செல்வதற்குமுன் ஆசாரியன் கர்த்தருக்கு பலி செலுத்தி தன்னுடைய ஜனத்தை அனுப்புவது வழக்கம்அன்று வழக்கத்திற்கு மாறாக நடந்து போயிற்றுஎப்படியென்றால் பலி செலுத்தி அனுப்பிவைக்கக் கூடிய ஆசாரியனாகிய சாமுவேல் வர தாமதித்து விட்டது உடனே சவுல்பொறுமையாக கர்த்தருக்கு காத்திருக்காமல் ஆசாரியன் வேலையை அவன் செய்துமுடித்தான் இதனிமித்தம் அவன் கர்த்தருடைய கட்டளையை மீறி நடக்க ஏதுவாயிற்று [ 1சாமுவேல் 13ம் அதிகாரம் ]
2.கர்த்தரால் வெறுக்கப்பட்ட அதாவது இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்த போதுஅமலேக்கு அவர்களுக்கு வழி மரித்ததால் கர்த்தரின் கோபம் எப்பொழுதும்அமலேக்கியருக்கு விரோதமாய் இருந்ததுஇதினிமித்தம் சாமுவேல் சவுலைப் பார்த்துசொன்னார் நீ போய் அமலேக்கியரை முறிய அடிப்பாயாக என்று இதோஅமலேக்கியருக்கு விரோதமாக நடந்த யுத்தத்தில் என்ன நடந்தது சவுல் உலகபொருளின் மேல் ஆசைப்பட்டு எல்லாவற்றையும் கொன்று போடுவதற்குப் பதிலாககொழுமையானவைகளை தனக்காக வைத்துக் கொண்டான்அதாவது கர்த்தருக்குக்கீழ்ப்படியாமல் போனான்இப்படியாக கர்த்தருடைய வார்த்தையைப்புறக்கணித்தபடியினால் அவர் சவுலை ராஜாவாயிராதப்படிக்கு தன்னுடையசிங்காசனத்திலிருந்து தள்ளினார் [ 1சாமுவேல் 15ம் அதிகாரம் ]
இப்படியாக தேவனுக்கு விரோதாமாய் அதாவது தேவ சித்தத்திற்கு எதிராக வாழ்ந்தசவுல் தனக்காக வைக்கப்பட்டிருந்த மகிமையான சிங்காசனத்தை இழந்து போனான்.
2.தேவ மகிமையை இழந்து போகுதல்ஆதாம்
தன்னோடு உறவாடும் படியாக தேவன் தன்னைப் போலவே அதாவது தன்னுடையசாயலாக மனுஷனை உண்டாக்கினார்அதுமட்டுமல்லாமல் அவனுக்கு தன்னுடையமகிமையையும் அளவில்லாமல் கொடுத்திருந்தார்அவனுடைய பெயர் ஆதாம் ஆகும்.ஆனால் இந்த ஆதாம் என்ன செய்தான் தனக்கு துணையாக தந்த மனுஷியாகியஏவாளுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தான்எப்படியெனில் தேவ மகிமையைஇழந்து போகாதபடிக்கு தேவனால் தனக்கு நன்மை தீமையை அறியக்கூடிய மரத்தின்கனியானது புசிக்கக் கூடாதப்படிக்கு தடை செய்யப்பட்டிருந்ததுஆனால் இந்த ஆதாமோஏவாளுடன் சேர்ந்து கொண்டு பிசாசின் வார்த்தைக்கு தங்களை விற்றுப் போட்டனர்.இதனால் என்ன நடந்தது தேவ மகிமையால் சூழப்பட்ட ஆதாம் தம்பதியினார் இந்தமகத்தான மகிமையை இழந்து போனார்கள்இந்த மகிமைதான் இவர்களின் உலகநிர்வாணத்தை மூடியிருந்ததுஇதை இழந்த இவர்கள் முதன் முதலில் தாங்கள் ஒன்றும்இல்லாத நிர்வாணிகள் என்பதை அறிந்தனர்.
அதுமட்டுமல்லாமல் உலகம் இவர்களுக்கும் தேவனுக்கும் இடையில் எந்தவிததொடர்பும் இல்லாதபடி பாவம் என்கிற சுவரை எழுப்பினது என்று நாம் பார்க்கிறோம்.இதோ எப்பொழுதும் தேவ மகிமைக்குள் இருக்க வேண்டிய ஆதாம் தேவ சித்தத்தைஅலட்சியம் பண்ணினது நிமித்தம் ஏதேன் என்கிற சொர்க்கத்தை இழந்து உலகம் என்கிறகூறை வீட்டிற்குள் குடியேறினான் என்று பார்க்கிறோம். [ ஆதியாகமம் 1,2,3 ஆம்அதிகாரம் ]
3.தேவ அழைப்பை இழந்து போகுதல்சிம்சோன்
நியாயாதிபதிகள் மூலமாக தேவன் இஸ்ரவேல் ஜனங்களை அவர்களுடைய எதிரிகளின்கையிலிருந்து இரட்சித்துக் கொண்டிருந்த காலம் அது அந்த சமயத்தில் தான்சிம்சோனை இஸ்ரவேலில் இரட்சகராக எழுப்பினார்தேவனுடைய அழைப்புசிம்சோனைக் குறித்து எப்படியாக இருந்தது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்
வேதம் சொல்லுகிறதுநீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனை பெறுவாய் அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்றுநசரேயனாயிருப்பான் அவன் இஸ்ரவேலைப் பொலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கிரட்சிக்கத் தொடங்குவான் என்றார் [ நியாயாதிபதிகள் 13:5 ]
ஆனால் இந்த நசரேயன் விரதத்தை சிம்சோன் அதாவது தேவ சித்தத்தைக் காத்துகொண்டானாபாருங்கள் எந்த இடத்துக்கு கால் வைக்கக்கூடாதோஅந்த இடத்துக்குசிம்சோன் சென்றான் எப்படியென்றால் தன்னுடைய கண்ணுக்கு பிரியமாயிருந்ததேவனால் வெறுக்கப்பட்ட பெலிஸ்திய சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணை தேடிசெல்லும் போது வழியருகே கிடந்த செத்த சிங்கத்தின் உடலில் இருந்த தேன் கூட்டைஎடுத்து அதிலிருந்த தேனை பருகினான் என்று நாம் நியாயாதிபதிகள் 14ம் அதிகாரத்தில்வாசிக்க முடிகிறது.
அதுமட்டுமல்லாமல் சவரகன் கத்தி தலையில் படக்கூடாது என்று தடை செய்யப்பட்டசிம்சோன் தன் தலை முடியை தெலீலாளின் ஆசை வார்த்தைக்கு ஒப்புக் கொடுத்தான்இதனால் என்ன நடந்தது தனக்கான தேவ அழைப்பை பாதியிலே இழந்து போக நேர்ந்ததுஅதினால் தன்னுடைய கண்களின் இச்சைகளின் நிமித்தமே என்பதை மறந்து விடக்கூடாது.
4.ஆத்துமாவை இழந்து போகுதல்பிலேயாம்
பின்பு இஸ்ரவேல் புத்திரர் பிராயணம் பண்ணி எரிகோவின் கிட்ட இருக்கும்யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள் [எண்ணாகம்ம் 22:1 ]
இந்த இஸ்ரவேலின் பலத்தைக் கண்டு பயந்த மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னசெய்தான்அவர்கள் என்னிலும் பலவான்கள் என்று அறிந்து பேயோரின் குமாரனாகியபிலேயாமை அழைத்து வரும்படி தன்னுடைய ஸ்தானாதிபதிகளை அனுப்புகிறான்அதுமட்டுமல்லாமல் அவன் பிலேயாமிடம் என்ன சொல்லுகிறான் என்று பாருங்கள்.
அவர்கள் என்னிலும் பலவான்கள் ஆகிலும் நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன் ஆதலால் நீர் வந்து எனக்காக அந்தஜனங்களைச் சபிக்க வேண்டும் அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறி அடித்துஅவர்களை இத்தேசத்திலிருந்து துரத்தி விடலாம் என்று சொல்ல சொன்னான் [ எண் 22:6 ]
முதலில் கர்த்தர் எனக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படியே செய்வேன் அவருடையவார்த்தையை நான் மீறுவதில்லை என்று பிலேயாம் மோவாபிய ராஜாவுக்குமறுமொழியாக சொல்லியனுப்பினான்ஆனால் என்ன நடந்தது பிறகு இந்த பிலேயாம்மோவாபியரின் பணத்துக்கு தன்னை அடிமையாக்கி கொண்டான்இதனிமித்தம்இஸ்ரவேல் பாவம் செய்யும்படியாக ஆலோசனைக் கொடுத்தான் இதனால் தேவனுடையகோபத்துக்கு ஆளானான் என்று பார்க்கிறோம்.
பிலேயாமின் பின்பகுதி எப்படி கழிந்ததுபாருங்கள் மீதியானியருக்கும் இஸ்ரவேல்ஜனங்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் இந்த பிலேயாம் பரிதாபமாககொல்லப்பட்டான் என்று எண்ணாகமம் 31ம் அதிகாரம் 8ம் வசனத்தில் பார்க்கிறோம்.
இதோ உலகத்திலுள்ள பணத்தின் மேல் தன் ஆசையை வைத்தான் இதனிமித்தம் தேவசித்தத்தை இஸ்ரவேல் ஜனங்கள் மீறுவதற்குக் காரணமானான்இதனிமித்தம்தன்னுடைய விலையேறப்பெற்ற ஆத்துமா நஷ்டம் அடையும்படியாக கைவிடப்பட்டான்என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
5.இயேசு கிறிஸ்துவை இழந்து போகுதல்யூதாஸ்காரியோத்து
இயேசு கிறிஸ்து மனுஷகுமாரனாய் இந்த உலகத்தில் வந்த போது தம்மோடு இருக்கவும்பிரசங்கம் பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்வியாதிகளை குணமாக்கிப்பிசாசுகளை துரத்தும்படியாக அவர்களை அதிகாரமுடையவர்களாயிருக்கவும் பன்னிரண்டுசீஷர்களை தெரிந்து கொண்டார் அவர்களில் ஒருவன் தான் இந்த யூதாஸ்காரியோத்துஆவான் [ மத் 10:4 மற்றும் மாற்கு 3ம் அதிகாரம் ]
ஆனால் இந்த யூதாஸ்காரியோத்தின் வேலை என்னவாக இருந்தது பணப்பையைசுமக்கிறவனாய் காணப்பட்டான் என்பதாக அறிகிறோம் இதனிமித்தம் அதாவதுஇயேசுவை சுமப்பதற்குப் பதிலாக உலகத்தை ஒவ்வொரு நாளும் தன்னுடையவாழ்க்கையில் சுமந்து கொண்டு சென்றான் இந்த உலக மேன்மையானது இயேசுகிறிஸ்துவை மறக்கச் செய்தது இதனால் முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டுதன்னுடைய ராஜாவை எதிராளிக்கு விற்றுப் போட்டான் இதானால் அவன் மேல் இருந்ததேவ சித்தம் உடைந்து போனது தேவனோடு கூட சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கவேண்டியவன் நான்று கொண்டு செத்து தன்னுடைய ஆத்துமாவை அழித்து போட்டதுமாத்திரம் அல்ல ஆசீர்வாதத்தின் பாத்திரமாக தெரிந்து கொள்ளப்பட்டயூதாஸ்காரியோத்து சாபத்தின் பாத்திரமாக மாறினான் என்பதையும் நாம் வேதத்தில்இருந்து பார்க்க முடிகிறதுவேதம் சொல்லுகிறது இப்படிப்பட்டவனுடைய இடம் பாழாய்போகக்கடவது.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே
நாம் எப்படி இருக்கிறோம் நம்மேல் இருக்கிற தேவ சித்தத்தை அறிந்து கொண்டு அந்தசித்தம் நிறைவேற ஒவ்வொரு நாளும் தேவசித்தத்தின்படி ஜெபிக்கிறோமாஅல்லதுஉலகத்தின் மேல் இருக்கிற ஆசையின் நிமித்தம் தேவ சித்தத்தை மீறி மேலேசொல்லப்பட்ட கதாப்பாத்திரங்களைப் போல அழிந்து போக ஆசைப்படுகிறோமா?என்பதை சிந்தித்து பாருங்கள்ஏனென்றால் வேதம் சொல்லுகிறது
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான் என்றுநாம் மத்தேயு 7:21 ல் தேவ சித்தத்தின் அவசியத்தை அறிந்து கொள்கிறோம்தேவன்தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீவதிப்பாராக  ஆமென்

Comments