உத்தமம் என்பது கிறிஸ்த்தவனின் வாழ்வில் உண்மை, நேர்மை, முழுமை முதலியவற்றைக் கொண்டிருப்பது. அது ஒரு பண்பு அல்லது தனி இயல்பு, உயர்ந்த பண்பு திறம் என்று சொல்லளாம். ஒரு கிறிஸ்த்தவன் இதை தன்னில் தானே பெற்றிட முடியாது. இதற்கு கடவுளின் அருள் வேண்டும். இதைக்குறித்து பவுல் சொல்லுகிறார், “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், கடவுளால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும் படிக்கு கடவுளிடமிருந்து புறபடுகிற ஆவியையே பெற்றோம்” என்று. (1கொரிந். 2:12) உண்மையான உத்தமம் என்பது, உண்மையான, நேர்மையான சீரிய நிலையாகும்.
உண்மையுள்ள கிறிஸ்த்தவன் எப்படியிருப்பான்?
தன்னை படைத்த கடவுளுக்கு சந்தோஷம் உண்டாகும் வகையில் உத்தமனாய் இருப்பான். “கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான். அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்” (நீதிமொழிகள் 25:13).
அடுத்து, முழுமை பரிபூரணம் குற்றமில்லாமை இவைகளில் கவனமாக இருப்பான். “நான் கடவுளுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்” என்று பவுல் தன் உத்தமத்தைக் குறித்து ஜாக்றதை உடையவராக இருப்பதை காண்கிறோம். எந்த ஒரு கிறிஸ்த்தவனுக்கும் தான் செய்யும் தொழிலில், வாழ்வில் உத்தமம் மிகவும் அவசியமான பண்பாக இருந்திடவேண்டும்.
தாவீது இதைப்பற்றி சொல்லும்போது, “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாராத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வத்த்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுபவன் தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தொழனுக்குத் தீங்கு செய்யாமலும், தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கடவுளுக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் (லஞ்சம்) வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப் படுவதில்லை.
உங்கள் இருதையத்தை தொட்டு நீங்கள் உத்தம கிறிஸ்த்தவரா என்று சொதித்து அறியுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து உங்களை உத்தமத்தில் நடத்துவராக. ஆமேன்.
Comments
Post a Comment